விளையாட்டாய்
கண்ணத்தில் விரல் பதித்த
தன் தாயிடம்
செல்ல சண்டையிட்டு
ஆட்டுக்கல்லின் மீது அமர்ந்து
கோபத்தை மறந்து கொண்டே தூங்கும்
இரு வயது சிறுவன்..
காலையில்,
தலைகுனிந்து மெதுவாக
கண்ணை கசக்கிக்கொண்டே
சிறு கோபத்துடன்
எழுந்த தன் மகனுக்காய்
தான் எடுத்துவைத்த
பாலைக்கொடுத்து..
சார சாரயாய் விழுந்து
வறண்டு போன கண்ணீரின்
தடத்தை துடைத்து,
வெது வெதுப்பாய் வந்து
ஈக்கள் மொய்க்கும்
மகனின் மலத்தை அள்ளி
அதோ..அந்த சாக்கடையில்
எறிந்துவிட்டு தன்
தரிச்சேலையின் நுனியால்
பாலால் அவன் கழுவிய
முகத்தை வலிக்காமல் வழித்து
தன் மாரில் இட்டு அரவணைத்து
மறுபடியும் தூங்க வைக்கும்
அந்த அப்பாவி சிறுக்கி கொடுக்கும் சுகம்..?
ஹும்..
யார் தருவார்..
அந்த எதிர்பார்ப்பில்லாத சுகம்?..
அவளைத்தவிர!..