puvi

அன்பு ஒரே வானம் ஒரே பூமி ஒரே இறைவன் எனச் சொல்ல ஒன்றே குலம் எனும் ஆத்ம ஜீவனோடு அகத்திலும் அன்பே குடியிருக்கும்!

புதன், 1 டிசம்பர், 2010

அம்மா.....

அடி முடி தேடினாலும்
அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.
அம்மா

நட்பு

நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்
நல்ல நட்பே!
அழகிய மாடம் நட்பு.
தூய்மை அதன் அரண்.
மெய்யாய் இருக்கும் வரை
மெய்க் காவல் நட்பு!
உன்னை எடை போட
உன் நட்பு போதுமாகும்.
நம்பிக்கை நாணயம்
சேர்ந்த கலவை நட்பு.
துன்பத்தில் சம பங்கு
நல் நட்பு.
உன் விழியில் தூசி
நட்பின் விழியில் கண்ணீர்.
நல்ல நட்பு
நாட்பட்டே கிட்டும்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

நட்பு........

இதயம் கொடுத்து உயிரை
பறிக்கும் காதலை விட
உயிரை கொடுத்து இதயம்
கேட்கும் நட்பே சிறந்தது.!!!!

கண்களில் தோன்றி
இதயத்தில் முடிவது
காதல்......

கண்களில் தோன்றி ...
இதயத்தில் தொடர்ந்து
உதிரத்தில் கலப்பத்துதான்
நட்பு .........

இன்னொரு தாஜ்மஹால்

நான்
மன்னன் ஷாஜஹான் அல்ல
சலவைக்கற்களால்
தாஜ்மஹால் கட்ட…

நான்
உன் ஏழைக்கணவன்…
நமக்கு
சொந்தமாய்
ஒரு ஓலைக்குடிசைகூட
இல்லைதான்…

ஆனால்…

என்னால்
அதைவிட பெரிய மஹால்
கட்ட முடியும்
சலவைக்கற்களால் அல்ல…
அதைவிட உயர்வான
அன்பினால்!
                                                                  By-Puvi

அம்மா…! நீ எங்கே சென்றாய்?

அம்மா..!
அன்று…
வளைந்த புருவம்
வடிவாய் வளரவில்லை என
தினம்தினம் எண்ணெய் தேய்த்து
எடுப்பாய் வளர செய்து
அழகு பார்த்தாய்!
இன்று…!
புருவத்தை பற்றி பலர் கேட்கும் போதும்
என் அம்மா தான் காரணம்
என்று பெருமிதம் கொள்வதை
கேட்க மனமின்றி…
நீ எங்கே சென்றாய்?
அன்று…
உன் தேவைகளை குறைத்து
பண்டிகைக்கு இரண்டென
புத்தாடை வாங்கி தந்து
பூரிக்க வைத்தாயே
இன்று…!
உன் ஆசை மகள்
கைநிறைய சம்பாரித்தும்
கை வளை பூட்டவோ
கல் வைத்து ஆழி இடவோ
உன் கை நீட்ட மறுத்து..
நீ எங்கே சென்றாய்?
அன்று…
பிறந்த நாள் என்றால்
உன் முதல் வாழ்த்தோடு ,
சோம்பல் முறித்து எழுந்து
பின் யாரோசிலர் வாழ்த்துக்காக
காத்திருந்தேன்
இன்று…
வாய்நிறைய வாழ்த்த
ஆயிரமாயிரமாய் இருந்தாலும்
உன் வாய் மலர்ந்த
ஓர் அன்பு வார்த்தைக்கு
ஏங்கும் என்னை அலைகழித்து…
நீ எங்கே சென்றாய்?
அன்று…
கோவிலுக்கு சென்று
உனக்காக மட்டும் தானே
வேண்டி வந்தேன்…
இன்று …
கோவிலுக்கு செல்லாததற்கு
காரணம் கேட்பவர்க்கு
என்ன விடை கூறுவது
என்று கூறாமல்
விடைப்பெற்று
நீ எங்கே சென்றாய்? அதிர்ந்து போனேன்……
‘அம்மா பாடல்’ ஒலித்து
அன்று…
நோயுற்றபோது
கசாயம் போட்டு..
கம்பளிக்குள் அடைக்கலம் புகுத்தி..
வேளைக்கு மருந்து தந்து
சர்வ காலமும் என்னையே
நினைத்திருந்தாய்…
இன்று…
கண்ணீரோடு கட்டிலில் கிடந்து..
கலவர மனதோடு
காய்ச்சலுக்கு மருந்து தேடி
உன்னையே நினைத்திருந்தபோதும் …
அருகில் வந்து
ஆராரோ  பாடாமல்…
நீ எங்கே சென்றாய்?
அன்று…
விடுதியில் விட்டு
சென்ற போது-ஒரு துளி
சிந்திய போதே..
உயிர் வலியால் துடிதுடித்தாய்…
இன்று…
கரைபுரண்டோடும் என்
கண்ணீரை துடைக்கவில்லை.
என்றாலும்……!
???
???
???
இதே அறையில்..
எங்கோ நின்று கொண்டு..
கன்னம் தொட்டு
கண்ணீரை துடைக்க முடியாமல்…
தவிக்கும் கதறும் உன்னை
இனி நான் கேட்கமாட்டேன்…
நீ எங்கே சென்றாய் என…
அம்மா…
நீ என்னுடனே இருக்கிறாய்…
நீ எனதாகவே இருப்பாய்….
                                                                      By-puvi

அம்மா

கருவினில் தாங்கி
உருவாகி உயிர் பெற
உழைத்தவள் அம்மா.
உயிர் எழுத்தின்
உண்மைப் பொருள் அம்மா.

சனி, 27 நவம்பர், 2010

அடுத்த தலைமுறை நோக்கி…..

டுத்த தலைமுறை நோக்கிய பாதையில்
தொடுத்த மணிகளான பிள்ளைகள் தமிழில்.
நெடுத்த பாதை அடியிட்டதும் வராது.
படுத்த பாறை உடைக்க வேண்டும்.
நெடுத்த பற்றை வெட்ட வேண்டும்.
எடுத்த ஆயுதத்தின் உறுதி, பாவனை
கொடுத்த உழைப்பில் தொழிலாளி பங்கும்
கொடுத்திடும் ஒரு வெற்றிப் பாதை.
த்தம மனிதர் பலர் உழைத்தாலும்
சத்தியமான உழைப்பெனும் பெயரை
அத்திவாரமின்றி அமையும் கட்டிடம்
மொத்தமாகத் தராது என்பது திட்டம்.
அடுத்த தலைமுறை நோக்கிய பயணம்
ஆடம்பரமாய், சர்வதேச மயமாய், சுயமாய்
அவரவர் திறமையின் அடிப்படை விரிவில்
அடி பெயர்ந்திடும் வேகமாய், விவேகமாய்

                                                                 By-Puvi 

யார் தருவார்?..

 

விளையாட்டாய்
கண்ணத்தில் விரல் பதித்த
தன் தாயிடம்
செல்ல சண்டையிட்டு
ஆட்டுக்கல்லின் மீது அமர்ந்து
கோபத்தை மறந்து கொண்டே தூங்கும்
இரு வயது சிறுவன்..

காலையில்,

தலைகுனிந்து மெதுவாக
கண்ணை கசக்கிக்கொண்டே
சிறு கோபத்துடன்
எழுந்த தன் மகனுக்காய்
தான் எடுத்துவைத்த
பாலைக்கொடுத்து..
சார சாரயாய் விழுந்து
வறண்டு போன கண்ணீரின்
தடத்தை துடைத்து,
வெது வெதுப்பாய் வந்து
ஈக்கள் மொய்க்கும்
மகனின் மலத்தை அள்ளி
அதோ..அந்த சாக்கடையில்
எறிந்துவிட்டு தன்
தரிச்சேலையின் நுனியால்
பாலால் அவன் கழுவிய
முகத்தை வலிக்காமல் வழித்து
தன் மாரில் இட்டு அரவணைத்து
மறுபடியும் தூங்க வைக்கும்
அந்த அப்பாவி சிறுக்கி கொடுக்கும் சுகம்..?
ஹும்..
யார் தருவார்..
அந்த எதிர்பார்ப்பில்லாத சுகம்?..
அவளைத்தவிர!..

                                                                                    By-puvi

தாயின் கருவறையின்றி.....

 

தந்தை

சொல்மிக்க மந்திரமில்லை...


தாயின் கருவறையின்றி


இவ்வுலகில் உயிர்கள் இல்லை..... 

                                                                                    By-Puvi 

மழையே

 

உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏ தெரியுமா,
நா இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தா!.... 

                                                                                                    By-puvi